பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திருத்தலப்பயணம் சம்பந்தர் சுரிகுழல் நல்ல துடிஇடை யோடு பொரிபுல்கு காட்டிடை ஆடுதிர், பொங்க விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய எரிமழு வாள்படை எந்தை பிரானே. சுந்தரர் பண்ணிடைத் தமிழ்ஒப்பாய் பழத்தினிற் சுவைஒப்பாய் கண்ணிடை மணிஒப்பாய் கடுஇருள் சுடர்ஒப்பாய், மண்ணிடை அடியார்கள் மனத்துஇடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 14. சிர்காழி பிரமபுரீசுரர்-திருநிலைநாயகி சம்பந்தர் : 87, அப்பர் : 3, சுந்தரர் : 1. வழிபட்ட நாள் : 26-12-55; 15-10-65 இரயில் நிலையம். திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் பிறந்தருளிய தலம். அதிகமான தேவாரப் பதிகம்பெற்றது இத்தலமே. இத்தலத்திற்கு 7 தேவாரப் பதிகங்கள் இருக்கின்றன. சீர்காழி, பிரமபுரம்,தோணிபுரம்.வேணுபுரம், சிரபுரம்,புகலி, வெங்குருபூந்தராய்,புறவம், சண்பை,கொச்சைவயம்,கழுமலம் என, 12 பெயர்கள் இத்தலத்திற்குரியன. சம்பந்தப் பெருமானுக்கு அம்பிகை ஞானப்பால் கொடுத்தது இத்தலத்தில்தான். சம்பந்தர் உருவம் இங்கு பேரழகுடன் காட்சி தருகின்றது. சிவன் கோயிலுக்குள் சம்பந்தருக்கு ஒரு தனிப் பெரிய கோயில் இங்கு இருக்கின்றது. சம்பந்தரின் முதல் தேவாரம் எழுந்தது இத் தலத்தில்தான்.