பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 23 இராமநாடகம்பாடிய அருணாசலக் கவிராயர் இவ் ஊரினரே. அருணாசலக் கவிராயர் சிர்காழிக்குத் தலபுராணம் பாடியுள்ளார். கட்டுமலையில் உயரமான இடத்தில் தோணியப்பரும் அதற்கு மேல் தளத்தில் சட்டை நாதரும் காட்சியளிக்கின்றனர். சம்பந்தர் தோடு டையசெவி யன்.விடை ஏறி ஒர் தாவெண் மதிதுடி, காடு டைய சுட லைப்பொடி பூசி.என் உள்ளம் கவர்கள்வன், ஏடு டையமல ரான்முனை நாள்பணிந்து ஏத்த அருள் செய்த பீடு டையபிர மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே. அப்பர் கெண்டை போல்நயனத்துஇம வான்மகள் வண்டு வார்குழ லாள்உடன் ஆகவே, துண்ட வான்பிறைத் தோணி புரவரைக் கண்டு, காமுறு கின்றனள் கன்னியே. சுந்தரர் வரும்பெரும் வல்வினை என்றுஇருந்து எண்ணி வருந்தல்உற் றேன்.மற வாமனம் பெற்றேன். விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப்பு எய்தி வேண்டிதின் றேன்:தொழு தேன்விதி யாலே, அரும்பினை, அலரினை.அமுதினை.தேனை. ஐயனை, அறவன்என் பிறவிவேர் அறுக்கும் கரும்பினை. பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.