பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருத்தலப்பயணம் மணிவாசகர் கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும். பட்டினத்துப் பிள்ளையார் ஆரணம் நான்கிற்கும் அப்பா லவன்:அறி யத்துணிந்த நாரணன் நான்முக னுக்குஅரி யான் நடு வாய்நிறைந்த பூரணன் எந்தை புகலிப் பிரான்பொழில் அத்தனைக்கும் காரணன் அந்தக் கரணம் கடந்த கருப்பொருளே. சேக்கிழார் தொண்டர்குழாம் புடைசூழத் தொழுதகரத் தொடு.நீறு துதைந்த கோலம் கண்டவர்தம் மனம்கசிந்து கரைந்து உருகும் கருணைபுறம் பொழிந்து காட்டத் தெண்திரைவாய்க் கல்மிதப்பில் உகைத்தேறும் திருநாவுக் கரசர் தாமும் வண்தமிழால் எழுதுமறை மொழிந்தபிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார். 15. திருக்கோலக்கா (திருத்தாளமுடையார் கோயில்) சத்தபுரீசுரர்-ஒசைகொடுத்தநாயகி. சம்பந்தர் : 1 சந்தரர் : 1. வழிபட்ட நாள் : 25-12-56; 15-10-65 சிர்காழிக் கோயிலுக்கு மேற்கே 1 மைலில் இத் தலம் இருக்கின்றது. திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் தங்கத்தாளம் பெற்ற தலம் இது.