பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை (திரு. க. வெ. சித. வெ. வேங்கடாசலம் செட்டியார்) ஆண்டவனை வழிபடுவதே அங்கம் பெற்ற பயன் என்பார் அப்பர் சுவாமிகள். அரசர்களும், அடியார்களும் அதற்கெனவே ஆங்காங்கே ஆலயம் எழுப்பினர். ஒவ்வொரு தலத்தையும் கண்டு, கைதொழுது வணங்க, கடும் பிரயாணங்களை மேற்கொண்டனர். தேனினும் இனிய திந்தமிழ்ப்பாடல்களைத் திருத்தலங்களுக்குப் பாடிப் பரவினர். இதனால் தாங்கள் பயன் அடைந்ததோடு, ஏனையோரையும் பயன்பெற வகை செய்தனர். இங்ஙனம் ஆலய வழிபாடு தொன்றுதொட்டு, நம்மிடையே பல்கிப் பரந்தது. ஆலய வழிபாட்டில் ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக ஈடுபாடு என்று சொன்னால் மிகை அல்ல. மாலை நேரங்களில், புகழ்பெற்ற ஆலயங்களில் இவ் உண்மையைக் கானக்கூடும். ஆலய வழிபாடு, ஆலயம் அமைத்து அறப்பணி புரிதல் ஆகிய நற்தொண்டிற்கும், நகரத்தாருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. நகரத்தார் பகுதிகளில், உள்ள கோவில்களில், அப்பெருங்குலப் பெண்டிர் ஏராளமாகச் சென்று வணங்கி மகிழ்வதை அன்றாடம் பார்க்கலாம். ஆலய வழிபாடு என்னும் அரியதொரு நற்பழக்கத்தை என் மனைவி நன்கு கடைப்பிடித்தாள். பாடல் பெற்ற தலங்களுக்கும், புகழ் பெற்ற பிறதலங்களுக்கும் அடிக்கடி செல்வாள். என்னையும் அந்த நல்ல பழக்கத்தில் ஈடுபடுத்த முயன்றாள். ஆனால் அதற்கான வாய்ப்பும், பேறும் எனக்குக் கிட்டவில்லை. என் மனைவியின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. 15-9-62 அன்று அவள் இறைவன் திருவடி நீழலை அடைந்தாள். மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகமாம்தேனமுதிலிருந்து,"சிவபுராணம்"ஒதக்கேட்டு, விட்டவரியை நினைவுப் படுத்தி, தன்னைத் துய்மைப்படுத்திக் கொண்டு,புண்ணிய நிறைவையும் பெற்றாள். அவளது மறைவு எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அதிர்ச்சிநீக்கம் விரைவில் கிட்டக் கூடிய வகையைச் சேர்ந்ததா? இல்லையே. வாழ்க்கைத் துணையை இழந்தோரின் மனங்பாங்கை உள்ள வாறு உணர அம்மாதிரியான நிலைக்கு ஆளானவர்களா லேயே இயலும். என் மன அதிர்ச்சியைச் சிறிது சிறிதாக மாற்ற, ஆண்டவன் அருளால்,என்பெருமதிப்பிற்குரிய நண்பர்.தமிழ்க் கடல்சிவமணி', 'சிவம் பெருக்கும் சிலர் ராய.சொ.அவர்கள்.