பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 露。 இறைவன் கொடுத்த பொன் தாளத்திற்கு அம்பிகை ஒலி கொடுத்ததால் இங்கு எழுந்தருளி யிருக்கின்ற தேவிக்கு ஒசை கொடுத்தநாயகி என்பது பெயர். சம்பந்தருக்கு இறைவன் தாளம் கொடுத்த செய்தியை, "நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும் ஞான சம்பந்த னுக்குஉல கவர்முன் தாளம் ஈந்துஅவன் பாடலுக்கு இரங்கும் தன்மை யாளனை" எனச் சுந்தரமூர்த்திகள் பாடுவார். சம்பத்தர் நிழலார் சோலை நீல வண்டினம் குழலார் பண்செய் கோலக் காவுளான். கழலால் மொய்த்த பாதம் கைகளால் தொழலார் பக்கல் துயரம் இல்லையே. சுந்தரர் அன்று வந்துஎனை அகலிடத் தவர் முன் ஆள தாகஎன்று ஆவணம் காட்டி நின்று வெண்ணெய்நல் லுனர்மிசை ஒளித்த நித்தி லத்திரள் தொத்தினை, முத்திக்கு ஒன்றி னான்தனை உம்பர் பிரானை, உயரும் வல்அர னம்கெடச் சிறும் குன்ற வில்லையை மெல்லியல் உடனே கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.