பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مwg, 27 சோழநாடு என்பது நயம் வாய்ந்தது. புள்ளிருக்கு வேளுருக்கு வடுகநாத தேசிகர் என்ற புலவர் புராணம் பாடியுள்ளார். படிக்காசுத் தம்பிரான் இத் தலத்திற்குக் கலம்பகம் ஒன்று இயற்றியுள்ளார். சம்பந்தர் வாசநலம் செய்துஇமையோர் நாள்தோறும் மலர்துவ ஈசன்எம் பெருமானார் இனிதாக உறையும்இடம் யோசனைபோய்ப் பூக்கொணர்ந்துஅங்கு ஒருநாளும் ஒழியாமே பூசனைசெய்து இனிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே. அப்பர் பத்திமையால் பணிந்துஅடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வசித் தானை. எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை. எம்மானை, என்உள்ளத்து உள்ளே ஊறும் அத்தேனை அமுதத்தை. ஆவரின் பாலை, அண்ணிக்கும் திங்கரும்பை, அரனை. ஆதிப் புத்தேளை. புள்ளிருக்கு வேளூ ரானை. போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 17. திருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி) கண்ணாயிரநாதர்-முருகுவளர் கோதை சம்பந்தர் : 1. வழிபட்ட நாள்: 30-1-57; 14-10-65. வைத்திசுவரன் கோயிலுக்குத் தென்கிழக்கு 2 மைலில் இத் தலம் இருக்கிறது. தேவேந்திரன் சாபநீக்கம் பெற்று ஆயிரம் கண் பெற்ற தலம் இஃது என்ப.