பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

있8 திருத்தலப்பயணம் தண்ணார் திங்கள் பொங்குஅர வம்தாழ் புனல்சூடிப் பெண் ஆண் ஆய பேர்அரு ளாளன் பிரியாத கண்ணார் கோயில் கைதொழு வோர்கட்கு இடர்.பாவம் நண்ணா ஆகும் நல்வினை யாய நல்கும்மே. 18. திருக்கடைமுடி (கிழையூர்) கடைமுடிநாதர்-அபிராமியம்மை. சம்பந்தர் : 1 வழிபட்ட நாள் : 3-7-57; 19-10-65. ஆனந்தத் தாண்டவபுரம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கில் 2 மைல் தனிப்பள்ளிக்கு வடமேற்கே 1 மைல், திருநின்றியூருக்குத் தென்கிழக்கில் 4 மைல். மேற்கு நோக்கிய சன்னதி. கல்வெட்டுப்படி கோவில்படிக்குக்கிழக்கே 1% மையிலில் உள்ள சென்னம்பூண்டியே கடைமுடி என்பர். சம்பந்தர் அருத்தனை. அறவனை அமுதனை.நீர் விருத்தனைப் பாலனை வினவுதிரேல் ஒருத்தனை அல்லதுஇங்கு உலகம்ஏத்தும் கருத்தவன் வளநகர் கடைமுடியே. 19. திருநின்றியூர் இலக்குமிநாதர்-உலகநாயகி சம்பந்தர் : 1. அப்பர்: 1. சுந்தரர் : 2. வழிபட்ட நாள் : 1-2-57; 14-10-65 ஆனந்தத் தாண்டவபுரம் இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே 2 மைல். மாயூரம் இருந்து வைத்திசுவரன் கோயில் செல்லும் பெருவழிச் சாலையில் 5 மைல். சம்பந்தர் அச்சம்இலர் பாவம்இலர் கேடும்இலர் அடியார் நிச்சம்.உறு நோயும்இலர் தாமுந்நின்றி யூரில் நச்சம்மிட றுடையர்நறும், கொன்றைந யந்துஆளும் பச்சம்உடை அடிகள் திருப் பாதம்பணி வாரே.