பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப்பயணம் ஆப்டர் பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை. பேணாதார் அவர்தம்மைப் பேனா தானை. துறவாதே.கட்டறுத்த சோதி யானை. து நெறிக்கும் து:நெறியாய் நின்றான் தன்னை, திறமாய எத்திசையும் தானே ஆகி. திருப்புன்கூர் மேவிய சிவலோகன்னை. நிறமாம் ஒளியானை நீடு ரானை நீதனேன் என்னேநான் நினையா வாறே. சுந்தரர் வையகம் முற்றும் மாமழை மறந்து வயல நீரிலை மாநிலம் தருகோம் உய்யக் கொள்கமற்று எங்களை என்ன ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந்து எங்கும். பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டு அருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே சேக்கிழார். திருப்புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிகநினைந்து. விருப்பினொடும் தம்பணிகள் வேண்டுவன செய்வதற்கே, அருத்தியினால் ஒருப்பட்டுஅங்கு ஆதனுர் தனில்நின்றும் வருத்தமுறும் காதலினால் வந்து அவ்வூர் மருங்குஅணைந்தார். 21. திருநீடுர் அருட்சோமநாதர்-வேயுறுதோளி அப்பர் சுந்தரர் : 1. வழிபட்ட நாள் : 1-2-57; 15-10-65 நீடுர் என்னும் இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 1 கல் அளவில் கோயில் இருக்கின்றது. அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய முனை அடுவார் நாயனார் பிறந்து சிவனடியார்கட்கு உணவளித்து வீடு பேறு அடைந்த தலம் முனை அடுவார் நாயனாரின் எழுந்தருளும் உருவம் இங்கு உள்ளது.