பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இருத்தலப்பயணம் மைலில் இத் தலம் இருக்கிறது. இத்தலத்திற்குக் குறுக்கை வீரட்டம் என்ற பெயர். அட்டவீரட்டங்களுள் இது காமனை எரித்த தலம். மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தல புராணம் பாடியுள்ளார். அப்பர் அணங்குஉமை பாகமாக அடக்கிய ஆதி மூர்த்தி வணங்குவார் இடங்கள் திர்க்கும் மருந்துதல் அருந்த வத்த கணம்புல்லர்க்கு அருள்கள் செய்து காதலாம் அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே. 27. கருப்பறியலுனர் (மேலைக்காழி, தலைஞாயிறு) குற்றம் பொறுத்த நாதர்-கோல்வளையாய் சம்பந்தர் : சுந்தரர் : 1 வழிபட்ட நாள் : 30-1-57; 15-10-65. திருப்புன்கூரினின்றும் மேற்கே 2 லிைல் உள்ள மண்ணிப்பள்ளம் என்னும் ஊர் சென்று அங்கு இருந்து வடக்கே 1 மைல் சென்றால் இத் தலத்தை அடையலாம். இத் தலத்துக் கோயிலுக்குக் கொகுடிக் கோயில் என்று பெயர். சிர்காழியிற்போல் அம்மையப்பர் சட்டைநாதர் சந்நிதிகள் உள்ளன. சம்பந்தர் வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்து அம்ர்செ யும்தொழில்இ லங்கைநகர் வேந்தற்கு ஏய்ந்தபுயம் அத்தனையும் இற்றுவிழ மேனாள் காய்ந்தவன் இருப்பது கருப்பறியல் ஊரே.