பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jv கிடைத்தார்கள். அழகப்பாகல்லூரி வட்டத்திலேயே அவர்களை அமர்த்தி, அவ்வப்போது அன்னாரின் அறிவுரைகளையும், தமிழ்ச் செல்வத்தையும் பெற வகை செய்தேன். தேவாரம், பிரபந்தம் இன்னும் ஏனைய திந்தமிழ்த் தெய்வீகப் பாடல்களை, அவர் உணர்ச்சியுடன், நிறுத்தி, பாடல் வரிகளை மடக்கி, மடக்கிக் கேட்பவர் செவியையும். உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் பாங்கில், அவருக்கே உரித்தான கம்பீரமான குரலில், அரிய நினைவாற்றலுடன்.சொல்லி விளக்குவதையும் உவகையோடு அடிக்கடி கேட்டு மகிழ்வேன். வானொலி நிகழ்ச்சிகளைக்கேட்பதில் எனக்கு ஆசை. அதிலும் காலை நேரத்தில் ஒலிபரப்பாகும் அருள் வாக்கு பக்திப் பாடல்கள். இரவு நேரத்தில் நிகழும் காலட்சேபங்கள் இவற்றை இயன்றவரைத் தவறாது கேட்பேன். அப்போது நான் மன அமைதி பெறுவேன். மேலே குறிப்பிட்ட இருவாய்ப்புக்களும், "நானும் ஏன் தல யாத்திரை செய்யக்கூடாது?" என்ற எண்ணத்தை என் அகத்தே எழுப்பின. சிறுகச் சிறுக அந்த நல் எண்ணம் வலுப் பெற்றது. என் நண்பர். தமிழ்க்கடல் அவர்களிடம் இதுபற்றிக் குறிப்பிட்டேன். கோவிலுக்குப் போவது, அங்கு எழுந்தருளிய மூர்த்திகளை வழிபடுவது, அடியார்களின் அருள் வாக்குகளைச் சன்னிதியில் இசைப்பது இவற்றையே குறிக்கோளாகக்கொண்ட அன்னாருக்கு என் தலயாத்திரை எண்ணம் துள்ளும் இளமையைத் தந்தது என்றால் வியப்பில்லை. ஏற்கனவேயே தமிழ்க் கடல் அவர்கள் தேவாரப் பிரபந்தத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தவர். யாத்திரையிலுள்ள பலவிதச் சிரமங்களைக் கருத்தில் கொள்ளாது, தானும் கூட வருவதாக ஒப்புக்கொண்டார்கள். ஆகவே திருத்தலப் பயன எண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்து வலுப்பெற்று வந்தது. இன்னும் என் அரிய நண்பர்களும்,சிவநேசச் செல்வர்களுமான திரு. முத்த வெ. சொக்கலிங்கச் செட்டியார் அவர்களும், தேவகோட்டை, திரு. சேவு. மெ. மெய்யப்ப செட்டியார் அவர்களும் என்னைத் தலயாத்திரை செய்யுமாறு அடிக்கடி கூறி ஊக்குவித்தனர். எந்தக் காரியத்தை நினைத்தாலும் அதை விரைவில் செய்து, நன்கு முடிக்க வேண்டும் என்பது என் பிறவிக்குனம், ஆகவே திருத்தலப் பயணத்தைத் தொடங்கி, முடிக்கத் திட்டம்வகுத் தோம். தல யாத்திரையில் மிக்க அநுபவம் பெற்ற, தமிழ்க்கடல் அவர்களும், நண்பர் திரு. முத்த. வெ. சொ. அவர்களும் திட்டம் வகுத்துத் தந்தனர். தமிழ்க் கடலுடன், திரு. முத்த. வெ. சொ.