பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 3? சுந்தரர் ஆடுமின் அன்புடை வீர்!அடிக்கு ஆட்பட்ட துளிகொண்டு சூடுமின் தொண்டருள் ளீர் உமரோடுஎமர் சூழவந்து வாடும்.இவ் வாழ்க்கைதன் னைவருந் தாமல் திருத்தச்சென்று பாடுமின் பத்தருள் ளீர்!பழ மண்ணிப் படிக்கரையே. 31. ஒமாம்புலியூர் துயர்திர்த்தநாதர்-பூங்கொடிநாயகி. சம்பத்தர் : . அப்பர் : 1. வழிபட்டநாள் : 28-2-56; 4-i-56 சிதம்பரத்திற்குத் தென்மேற்கு 15 மைலில் உள்ள காட்டு மன்னார்குடியை அடைந்து அங்கிருந்து தெற்கே மைல் சென்றால் இத் தலத்தை அடையலாம். தகதினாமூர்த்தி சந்திதி சிறப்புடையது. சம்பந்தர் பூங்கொடி மடவான் உமைஒரு பாகம் புரிதரு சடைமுடி அடிகள் வீங்குஇருள் நட்டம் ஆடும்எம் விகிர்தர்! விருப்பொடும் உறைஇடம் வினவில், தேங்கமழ் பொழிலில் செழுமலர்கோதிச் செறிதரு வண்டுஇசை பாடும் ஓங்கிய புகழ்ஆர் ஒமமாம் புலியூர் உடையவர் வடதளி அதுவே. அப்பர் அருந்தவத்தோர் தொழுதுஏத்தும் அம்மான் தன்னை. ஆராத இன்அமுதை அடியார் தம்மேல் வரும்துயரம் தவிர்ப்பானை, உமையாள் நங்கை மணவாள நம்பியை.என் மருந்து தன்னை, பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துரங்கப் பொழில்கெழுவு தரும்ஓமாம் புலியூர் நாளும் திருந்துதிரு வடதளிஎம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.