பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 திருத்தலப்பயணம் 32. கானாட்டுமுள்ளுர் (கானாட்டாம்புலியூர்) பதஞ்சலிநாதர்-கோல்வளைக்கையாள் சுந்தரர் : : வழிபட்ட நாள் : 20-12-56; 4-1-66. சிதம்பரத்தினின்றும் தென்மேற்கே 15 மைலில் உள்ள காட்டுமன்னார் குடியில் இருந்து தெற்கே ஓமாம்புலியூருக்குச் செல்லும் பாதையில் 2 மைல் சென்று கிழக்கே திரும்பினால் 1 மைலில் இத் தலம் இருக்கின்றது. இத் தலம் கொள்ளிடக் கரையில் இருக்கின்றது. சுந்தரர் அருமனியை. முத்தினை.ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள்தம் பெருமானை. அருமறையின் பொருளை. திருமணியை, திங்கரும்பின் ஊறலிருந் தேனை, . தெளிவரிய மாமணியை.திகழ்தருசெம் பொன்னை, குருமணிகள் கொழித்துஇழிந்து, கழித்துஇழியும்திரைவாய்க் கோல்வனையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரைமேல் கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே, 33. திருநாரையூர் செளந்தரநாதர்-திரிபுரசுந்தரி சம்பந்தர் : 3: அப்பர் : 2. வழிபட்டநாள் : 22-12-56; 4-1-66: சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே காட்டு மன்னார்குடி செல்லும் பெருவழிச் சாலையில் 10 மைல் சென்று அங்கிருந்து தெற்கே% மைலில் இத் தலம் உள்ளது. இது நாரை வழிபட்ட தலம் என்ப.