பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 39 நம்பியாண்டர் நம்பிகள் பிறந்தருளிய தலம் இது. இங்குள்ள பொல்லாப் பிள்ளையாரை வழிபட்டு நம்பியாண்டார் நம்பி, தில்லைத் தலத்தில் சேமித்து வைக்கப் பெற்றிருந்த தேவாரப் பதிகங்களைக் கண்டெடுத்தனர் என்ப. சம்பந்தர் மாயவன் சேயவன் வெள்ளிய வன்விடம் சேரும்மைமிடற்றன் ஆயவன் ஆகியொர் அந்தர மும்அவன் என்று வரை ஆகம் தியவன் நீரவன் பூமிய வன்திரு நாரை ஆர்தன்னில் மேயவ னைத்தொழு வார்.அவர் மேல்வினை ஆயின வீடுமே. அப்பர் செம்பொன்னை. நன்பவளம் திகழும் முத்தை, செழுமனியை, தொழுமவர்தம் சித்தத் தானை. வம்பு.அவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை, மதில்கச்சி மன்னு கின்ற கம்பனை,எம் கயிலாய மலையான் தன்னை, கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் நம்பனை,எம் பெருமானை. நாதன் தன்னை, நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே. சேக்கிழார் அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல்வணங்கி, அருள்முன் பெற்றுப் பொய்ப்பிறவிப் பிணியோட்டும் திருவீதி புரண்டுவலம் கொண்டு போந்தே, எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச் செப்பரிய பெருமையினார் திருநாரை யூர்பணிந்து பாடிச் செல்வார்.