பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருத்தலப்பயணம் 36. கஞ்சனுரர் அக்கினிசுரர்-கற்பகநாயகி அப்பர் : 1. வழிபட்டநாள் : 7-1-57; 20-10-65. கஞ்சன் (பிரமன்) வழிபட்ட தலம் நரசிங்கன் பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து 1 கல். அரதத்த சிவாச்சாரியார் பிறந்து சைவம் வளர்த்த தலம். அவருக்குத் தனிக் கோயில் இருக்கிறது. அப்பர் தொண்டர்குழாம் தொழுதுஏத்த அருள்செய் வானை, சுடர்மழுவாள் படையானை, சுழிவான் கங்கைத் தெண்திரைகள் பொருதுஇழிசெஞ் சடையி னானை, செக்கர்வான் ஒளியானை, சேராது எண்ணிப் பண்டுஅமரர் கொண்டுஉகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்துத் தலைஅறுத்துப் பல்கண் கொண்ட கண்டகனை. கஞ்சனூர் ஆண்ட கோவை. கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 37.திருக்கோடிகா கோடிகாநாதர்-வடிவாம்பிகை சம்பந்தர் : 1. அப்பர் : 3, வழிபட்ட நாள் : 7-1-57; 20-10-65. கஞ்சனுருக்குக் கிழக்கே 2 கல். மூன்று கோடி முனிவர்கள் வழிபட்ட தலம். சம்பந்தர் பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை உண்டுமக்கு உரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக் கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.