பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

李肇 திருத்தலப்பயணம் 39. திருப்பனந்தாள் சடையப்பர்-பெரியநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 6-1-57; 14-1-66. கும்பகோணத்திற்கு வடகிழக்கே 10 மைல், ஆடுதுறை இரயில் நிலையத்தினின்றும் வடக்கே 6 மைல். பனைமரம் தல விருட்சமானதால் பனந்தாள் என்னும் பெயர் பெற்றது. கோயிலுக்குத்தாடகேச்சுரம் என்பது பெயர். தாடகை என்னும் ஓர் பெண்ணால் வழிபடப் பெற்றமையால் இத் தலம் இப் பெயர் பெற்றது. இத் தலத்தை வழிபட்ட தாடகை இராம காதையில் வரும் தாடகையல்லள். அவள் அன்புக்காக இலிங்கம் சாய்ந்து கொடுக்க அதை யானைகளாலும் சேனைகளாலும் நிமிர்த்த முடியாமற்போக குங்கிலியக் கலய நாயனார் வளைந்த சிவலிங்கத்தைக் கழுத்தில் கயிறு கட்டி இழுத்து நிமிர்த்த தலம் இது. மேற்கு நோக்கிய சத்நிதி. குமரகுருபர சுவாமிகள் கண்ட திருப்பனந்தாள் மடத்தைப் பெற்றிருக்கும் புண்ணியத் தலம் இது. சம்பந்தர் சூழ்தரு வல்வினை யும்உடல் தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதி ரேல்மிக ஏத்துமின் பாய்புனலும் போழ்இள வெண்மதி யும்அனல் பொங்குஅர வும்புனைந்த தாழ்சடை யான்பனந் தாள்திருத் தாடகை ஈச்சரமே. ஐயடிகள் காடவர்கோன் நாயனார். கரம்ஊன்றிக் கண்இடுங்கிக் கால்குலைய மற்றுஓர் மரம்ஊன்றி வாய்குதட்டா முன்னம்-புரம்மூன்றும் திச்சரத்தால் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய ஈச்சரத்தான் பாதமே ஏத்து.