பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 45 40. திருஆப்பாடி பாலுகந்தநாதர்-பெரியநாயகி அப்பர் : 1. வழிபட்ட நாள் : 6-1-57; 14-1-66. திருப்பனந்தாளிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் தென்மேற்கே ஒரு கல். மண்ணியாறு கோவிலுக்கு வடக்கே அண்மையில் ஒடுகிறது. சண்டேசுரநாயனார் சிவபெருமானை வழிபட்டுப்பேறடைந்த தலம். அப்பர் உள்ளுமாய்ப் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி வெள்ளமாய்க் கரையும் ஆகி விரிகதிர் ஞாயிறு ஆகிக் கள்ளமாய்க் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி அள்ளுவார்க்கு அள்ளல் செய்திட்டு இருந்த ஆப் பாடி யாரே. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள் கள்ளிடத்தான் வந்து கலவாமுன்-கொள்ளிடத்தின் தென் திருஆப் பாடியான் தெய்வமறை நான்கினையும் தன்திருவாய்ப் பாடியான் தாள். 41. திருச்சேய்ஞலூர் (சேங்கனூர்) சத்தியகிரிநாதர்-சகிதேவி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 6-1-57; 14-1-66. கும்பகோணத்தில் இருந்து வடகிழக்கில் 10 மைல். திரு ஆப்பாடியில் இருந்து தென் கிழக்கே 1% கல்.