பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருத்தலப்பயணம் சேய் (முருகன்) வழிபட்டு சர்வசங்காரப் படைப்பெற்று உவந்த சேய்தல் ஊர் சேய்ஞலூர் எனப்பெயர் ஏற்பட்டது. சண்டேசுவர நாயனார் பிறந்தருளி வளர்ந்து சிவ வழிபாடு செய்து வீடு பேறு உற்ற தலம். சம்பந்தர் பீர் அடைந்த பால்அது ஆட்டப் பேணாத வன்தாதை வேர் அடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்.தனக்குத் தார்.அடைந்த மாலைதுட்டித் தலைமை வகுத்ததுஎன்னே சிர் அடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. சேக்கிழார் பெருமை பிறங்கும் சேய்ஞ லூர்ப் பிள்ளை யார்தம் உள்ளத்தில் ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பான திருமஞ் சனமே முதலவற்றில் தேடா தனஅன் பினில்நிரப்பசி வரும்.அந் நெறியே அர்ச்சனைசெய்து அருளி வணங்கிமகிழ்கின்றார். 42. திருந்துதேவன்குடி கற்கடகநாதர்-அருமருந்தம்மை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 8-1-57; 14-1-66 கும்பகோணத்துக்குக் கிழக்கு 4 கல் தொலைவில் உள்ள திருவியலூருக்கு வடக்கே 1 மைலில் கோயில் வயலுக்குள் இருக்கிறது. நண்டு வழிபட்ட தலம். கற்கடம் : நண்டு. இங்கே இரண்டு அம்மன் சன்னிதிகள் இருக்கின்றன. மகா லிங்கத்தின் வடிவம் முன் பக்கத்தில் வெட்டுண்டு இருக்கிறது. கிழ மருத்துவ உருவில் அரசனுக்குக் காட்டிய இடத்தில் வெட்டப்பட்ட போது வெளிப்பட்ட இலிங்கமென்ப,