பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 47 சம்பந்தர் மருந்துவேண் டில்இவை மந்திரங் கள் இவை புரிந்துகேட் கப்படும் புண்ணியங்கள் இவை திருந்துதே வன்குடித் தேவர்தேவு எய்திய அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே. 43. திருவியலுTர் யோகாநந்தேசுரர்-செளந்தரநாயகி சம்பந்தர் : 1. வழிபட்ட நாள் : 8-1-57; 14-1-66. கும்பகோணத்திற்குக்கிழக்கே 4கல். பிரமன் அந்தண குலத்தில் பிறந்து ஏழுதம்பியருடன் இலிங்கத்தில் ஒடுங்கியதால் எண்மர் சடைகள் இலிங்கத்தில் உள்ளன. சம்பந்தர் எண்ணார்தரு பயனாய்அயன் அவனாய்மிகு கலையாய்ப் பண்ணார்தரு மறையாய் உயர் பெருளாய்இறை அவனாய்க் கண்ணார்தரும் உருவாகிய கடவுள் இடம் எனலாம் விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே. 44. கொட்டையூர் கோடீசுரர்-பந்தாடுநாயகி அப்பர் : 1. வழிபட்ட நாள் 31-12-55, 26-6-65. கும்பகோணத்திற்கு மேற்கே 2 மைல், சுவாமிமலைக்குக் கிழக்கே 2 கல், ஆமணக்குக் கொட்டைச் செடியின் கிழ் இலிங்கம் வெளிப்பட்டதால் ஊர் பெயர் கொட்டையூர். அரசனுக்குக் கோடிலிங்கமாகத் தோன்றியதால் கோயில் பெயர் கோடிச்சுரம்: இலிங்கத்தில் பல சிறு இலிங்கங்கள் அமைந்துள்ளன.