பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருத்தலப்பயணம் அப்பர் கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய் அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்துஅப் பாலான் கண்டாய் மலைப்பண்டம் கொண்டு வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய் குலைத்தெங்கம் சோலைஆழ் கொட்டை யூரில் கோடீச் சரத்துறையும் கோமான் தானே. 45. இன்னம்பர் எழுத்தறிநாதர்-கொந்தார் பூங்குழலி சம்பந்தர் : 1. அப்பர் : 4. வழிபட்ட நாள் : 31-12-55; 16-1-66. கும்பகோணத்தில் இருந்து மேற்கே 3 மைலில் உள்ள புளியஞ்சேரி என்னும் ஊரினின்றும் வடக்கே 1 மைலில் இத் தலம் இருக்கின்றது. கொட்டையூருக்கு வட மேற்கில் 1% மைல். இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. சம்பந்தர் எண்திசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய வண்டுஇசைக் கும்.சடை யீரே! வண்டுஇசைக் கும்.சடை யீர்உமை வாழ்த்துவார் தொண்டுஇசைக் கும்தொழி லோரே. அப்பர் என்னில் ஆரும் எனக்குஇனி யார் இல்லை. என்னி லும்இனி யான் ஒரு வன் உளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.