பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 49 46. திருப்புறம்பயம் சாட்சிநாதர்-கரும்பன்னசொல்லி சம்பந்தர் : 1. அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 31-12-55; 16-1-66, இன்னம்பரில் இருந்து வடக்கே 2 கல். கும்பகோணத்தில் இருந்து வடமேற்கில் 6 கல். சம்பந்தர் விரிந்தனை குவிந்தனை விழுங்குஉயிர் உமிழ்ந்தனை திரிந்தனை குருந்துஒசி பெருந்தகையும் நீயும் பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம் புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய். அப்பர் கோஆய இந்திரன் உள் இட்டார் ஆகக் குமரனும் விக்கின விநாய கன்னும் பூஆய பீடத்து மேல்அ யன்னும் பூமி அளந்தானும் போற்றி சைப்பப் பாஆய இன்இசைகள் பாடி ஆடிப் பார்இடமும் தாமும் பரந்து பற்றிப் யூஆர்ந்த கொன்றைப் பொறிவண்டு ஆர்க்கப் புறம்பயம்நம் ஊர்என்று போயி னாரே. சுந்தரர் முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும் ஆதலின் முன்னமே என்னை நீ தியக் காதுஎ ழுமட நெஞ்ச மேஎந்தை தந்தையூர் அன்னச் சேவலோடு ஊடிப் பேடைகள் கூடிச் சேரும் அணிபொழில் புன்னைக் கன்னி கழிக்கண் நாறும் புறம்ப யம்தொழப் போதுமே.