பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 51 மங்கையை வணங்கிக் கொண்டு வைகாவூர் செல்லலாம். இத் தலம் கொள் டெத்தின் தென்கரையில் இருக்கின்றது. சம்பந்தர் நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை ஆளுடைய ஞானமுதல்வன். நெஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவ லோகன் அமர் கின்றஇடமாம். அஞ்சுடரொடு ஆறுபதம் ஏழின் இசை எண்ணரிய வண்ணம் உளவாய் மைஞ்சரொடு மாதர்பல ரும்தொழுது சேரும்வயல் வைகாவிலே. 49. வடகுரங்காடுதுறை குலைவணங்கிசுரர்-அழகுசடைமுடியம்மை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 29-1-57, 3-1-66. கும்பகோணத்தினின்றும் திருவையாறு செல்லும் சாலையில் 15 ஆவது கல். திரு ஐயாற்றினின்றும் 6 கல். வாலியார் வழிபட்டதலம் என்று சம்பந்தர் தேவாரம் சாற்றும். சம்பந்தர் நீலமா மணிநிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் ஏலமோடு இலை,இல வங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி ஆலியா வருபுனல் வடகரை அடைகுரங் காடு துறையே.