பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 திருத்தலப்பயணம் 50. திருப்பழனம் ஆபத்சகாயேசுரர்-பெரியநாயகி சம்பந்தர் . அப்பர் : 5 வழிபட்டநாள் : 16-2-59, 3-1-66. திரு.ஐயாற்றுக்குக் கிழக்கு 2 கல். தம்மிடம் பெருங் காதல் கொண்டிருந்த "அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகள்" எனச் சேக்கிழார் அடிகளால் பாராட்டப்பெற்ற அப்பூதி அடிகளைத் தேவாரப் பாடலில் வைத்து அப்பர் சுவாமிகள் சிறப்பித்த பதி இத் திருப்பழனம். அணித்தே உள்ள திங்களூரில் வாழ்ந்த அப்பூதி அடிகளை அப்பர் சுவாமிகள் காணுங்கால் இத் தலத்தை வணங்கித் தான் சென்றார் என்று தெரிகிறது. ஒரு குன்ற வில்லானைத் திருப்பழனத்துள் இறைஞ்சி வருகின்றோம் என அப்பூதி அடிகளிடம் அப்பர் பெருமான் கூறியதாகப் பெரிய புராணம் பேசும். சம்பந்தர் பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார் திருமேனி செய்யார் கரிய மிடற்றார் வெண்ணுரல் சேர்ந்த அகலத்தார் கையா டலினார் புனலால் மல்கு சடைமேல் பிறையோடும் பையா டரவம் உடனே வைத்தார் பழன நகராரே. அப்பர் சொல்மாலை பயில்கின்ற குயிலினங்காள்! சொல்லீரே! பல்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் பொன்மாலை மார்பன்.என் புதுநலம்.உண்டு இகழ்வானோ? மணிவாசகர் பாங்கார் பழனத்து அழகா போற்றி!