பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 53 சேக்கிழார் "ஒருகுன்ற வில்லாரைத் திருப்பழனத் துள்இறைஞ்சி வருகின்றோம் வழிக்கரையில் நீர்வைத்த வாய்ந்தவனம் தருகின்ற நிழல்தண்ணீர்ப் பந்தரும்கண்டு அத்தகைமை புரிகின்ற அறம்பிறவும் கேட்டு அணைந்தோம்" எனப்பு:கல்வார். 51. திருவையாறு ஐயாற்றீசர்-அறம்வளர்த்தநாயகி சம்பந்தர் : 5 அப்பர் : 12 சுந்தரர் : 1. வழிபட்டதான் : 18-12-58, 2-1-66. தஞ்சாவூருக்கு வடக்கு 7 கல். இத் தலம் அதிகமான தேவாரம் பெற்ற வரிசையில் நான்காவதாக நிற்கின்றது. 1. சிர்காழி 2. திருவாரூர் 3 திருவிழிமிழலை 4. திருவையாறும் திருவதிகையும். இவ்விரண்டு தலங்களும் பதினெட்டுப் பதிகங்கள் பெற்றிருக்கின்றன. அப்பர் சுவாமிகளுக்குக் கயிலைக் காட்சி கொடுத்தருளிய தலமிது. சம்பந்தர் நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு புரமுன்றும் நீள்வா யம்பு சென்றுலாம் படிதொட்ட சிலையாளி. மலையாளி சேரும் கோயில் குன்றெலாம் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசம் மல்கு தென்றலார் அடிவருடச் செழும்கரும்பு கண்வளரும் திருவை யாறே அப்பர் பேணித் தொழும்அவர் பொன்னுல காளப் பிறங்குஅருளால் ஏணிப் படிநெறி இட்டுக் கொடுத்துஇமை யோர்முடிமேல் மாணிக்கம் ஒத்து. மரகதம் போன்று வயிரம்மன்னி, ஆணிக் கனகமும் ஒக்கும்.ஐ ஆறன் அடித்தலமே.