பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருத்தலப்பயணம் சுத்தரர் பிழைத்த பிழைஒன்று அறியேன்நான். பிழையைத் திரப் பணியாயே! மழைக்கண் நல்லார் குடைந்துஆட மலையும், நிலனும் கொள்ளாமைக் கழைக்கொள் பிரசம் கலந்துளங்கும் கழனி மண்டிக் கையேறி அழைக்கும் திரைக்கா விரிக்கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ! மணிவாசகர் கைஆர் வளைசிலம்பக் காதார் குழையாட மை.ஆர் குழல்புரளத் தேன்பாய வண்டுஒலிப்பச் செய்யானை. வெண்ணிறு அணிந்தானை, சேர்ந்தறியாக் கையானை, எங்கும் செறிந்தானை. அன்பர்க்கு மெய்யானை, அல்லாதார்க்கு அல்லாத வேதியனை, ஜயாறு அமர்ந்தானைப் பாடுதும்காண் அம்மானாய்! ஐயடிகள் காடவர் கோன் நாயனார். குந்தி நடந்து குனிந்து.ஒருகை கோல்ஊன்றி நொந்து.இருமி. ஏங்கி, துரைத்துஏறி-வந்துஉந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே! ஐயாறு வாயால் அழை. சேக்கிழார் "மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும்" என்னும் கோதறு தண்தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதி கங்கள் "வேத முதல்வர்ஜ யாற்றில் விரவும் சராசரம் எல்லாம் காதல் துணையொடும் கூடக் கண்டேன்" எனப்பாடி நின்றார்.