பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi துறைக்கான திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் படித்தோம். இத்தகைய அரியதொரு வாய்ப்பினை ರ್೯ மனைவியுடன் சென்று பெறும் பேற்றிற்கு நான் கொடுத்து வைக்கவில்லை என்ற குறை எனக்கு உண்டு. ஆயினும் அந்தக் குறையையும். தமிழ்க் கடல் அவர்கள் தமது அன்பு நட்பின் மூலமும்,தெய்வீகப் பாடல்களைப் பாடிவிளக்குவதன்மூலமும் நன்கு நீக்கினார்கள். எனவே அவருக்கு நான் எவ்வாறு நன்றி கூறி அமைவது என்பது எனக்குப் புலனாக வில்லை. நாங்கள் தல யாத்திரைகள் செய்யும்போது, தங்க இடம், உணவு, வாகன வசதிக்காக தங்கள் கார்களைத் தருவது இன்னும் பல்லாற்றானம் உதவி செய்தோர் பல்லோர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் பெயர், முதலிய விபரங்களை இப் புத்தகத்தின்யின் இணைப்பில் காணலாம். எங்கள் திருத்தலப் பயணத்தில், எங்களுக்கு மரியாதை செய்து வரவேற்றுச் சிறப்பித்த தமிழ் நாடு-ஆந்திரா ஆலய அறநிலையக் குழு திருவாகிகளுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கின்றோம். பெரிய திகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திரும்பியதும் அது பற்றிப் பேசி மகிழ்வது இயல்பு. ஆகவே எங்கள் திருத்தலப் பயணத்தைப் பற்றி எண்ணி மகிழ்ந்தும், பேசி மகிழ்ந்தும் வந்தோம் எங்களுக்குக் கிட்டிய மன நிறைவு, பயண அநுபவம், பிரயாண சிரமங்கள் இவை யாவும் மாறி மாறி அகத்தே தோன்றும். அதோடு, ஆங்காங்கே கண்ட மாபெரும் கோபுரங்களையும். ஆலய அமைப்பின் பேரழகையும் எண்ணிப் பார்த்து, நம் முன்னோர்களின் அறப்பணிகளுக்கு எங்கள் அஞ்சலியையும் செலுத்துவோம். குறிப்பாக, நகரத்தார். அதிலும் மிக மிக அதிகமாகத் தேவகோட்டை நகரத்தார் புரிந்துள்ள கோயில் அறப்பணியினைச் சொல்லிச் சொல்லி வியக்கின்றோம். தேவார-பிரபந்தத் தலங்களில் நகரத்தார் செய்த அறப்பணியின் விபரங்களையும் இந்நூலின் பின்னிணைப்பில் வெளியிட்டுள்ளோம். சோழ நாட்டில் கல் அகப்படுவது ஏது? கல்லே அகப்படாத அந்நாட்டில், வெளியிலிருந்து கற்களைக் கொண்டு வந்து, விண்ணை முட்டும் கோபுரங்களுடன், விசாலமான, எழில்மிக்க ஆலயங்களை அமைத்த பெரியோர்களின் தெய்வீகத் தொண்டு மிகமிகப் போற்றத் தக்கது. திருத்தலப் பயணத்தைப் பற்றிய நல்நினைவுகளையும், பயனை யும் ஏனையோரும் பெறவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தலங்கள், அவற்றிற்கான தலப் பாடல்கள் பற்றிய விபரம்,