பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருத்தலப்பயணம் சம்பந்தர் பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி ஆர்ப்பெரு மானை. நறைவள ரும்பொழில் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் மறைவள ரும்தமிழ் மாலை வல்லவர் தம்துயர் நீங்கி நிறைவளர் நெஞ்சினர் ஆகி நீடுஉல கத்திருப் பாரே. 54. திருமழபாடி வைரத்துரண்நாதர்-அழகாம்பிகை சம்பத்தர் : 3 அப்பர் : 2 கந்தரர் : 1. வழிபட்டநான் : 16-3-56, 11-1-66. திருவையாற்றில் இருந்து வடமேற்கே 4 மைலில் இத்தலம் இருக்கிறது. இடையில் கொள்ளிட நதி. கொள்ளிடத்தின் அக்கரையில் மழபாடிக் கோயில் இருப்பதால் இவ்வழி சென்றால் கொள்ளிடப் பெருநதியை நடந்து தான் கடத்தல் வேண்டும். திருச்சியில் இருந்து லால்குடி வழி சென்றால் கோயில் வரைக் காரில் செல்லலாம். திருச்சியில் இருந்து சுமார் 30 கல் அளவு. சம்பந்தர் அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும், செந்தமிழ்க் கிதமும். சீரினால் வளர்தரப் பந்தனை மெல்விர லாளொடும் பயில்விடம் மந்தம்வந்து உலவுசிர் மாமழ பாடியே. அப்பர் சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்கும் சுருள்சடைஎம் பெருமானே! தூய தெண்ணிiர். இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என்துணையே!என்னுடைய பெம்மான். தம்மான். பழிப்பரிய திருமாலும், அயனும் காணாப் பரிதியே! சுருதிமுடிக்கு அணியாய் வாய்த்த வழித்துணையாம் மழபாடி வயிரத் துனே! என்றென்றே நான்அரற்றி நைகின் றேனே.