பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 57 கந்தரர் பொன்னார் மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே! மன்னே! மாமணியே! மழபாடியுன் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே. ஐயடிகன் காடவர் கோன் தாயனார் இழவாடிச் சுற்றத்தார் எல்லாரும் கூடி விழவாடி ஆவிவிடா முன்னம்-மழபாடி ஆண்டானை. ஆர்.அமுதை அன்று.அயன்மால் காணாமை நீண்டானை நெஞ்சே நினை. 55. திருப்பழுவூர் வடமூலநாதர்-அருந்தவநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 2-9-57, 6-1-66, திருவையாற்றுக்கு வடக்கே 10 மைல் அரியலுனருக்குப் போகும் வழி. இடையில் கொள்ளிட நதியைக் கடக்க வேண்டும். திருச்சி அரியலூர்ச் சாலையில் சென்றால் நேரே காரில் கோயிலுக்குச் செல்லலாம். அரியலூர் இரயில் நிலையத்தில் இருந்து கிழைப்பழுவூர் என்ற இத் தலம் 7 கல். சம்பந்தர் முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன் அத்தன்:ளமை ஆளுடைய அண்ணல்:இடம் என்பர் மைத்தழை பெரும்பொழிலின் வாசம்.அது வீசப் பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு ஆரே.