பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 59 57. அன்பிலாலந்துறை (திருமாலயந்துறை. அன்பில்) சத்தியவாகிசர்-செளந்தரநாயகி சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநாள் : 16-3-56, 11-1-86 அன்பில், ஊரின் பெயர். ஆலந்துறை, கோயிலின் பெயர். லால்குடி இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கல். சம்பந்தர் கணைநீடுனரி மால்அர வம்.வரை வில்லா இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர் பிணைமாமயி லும்.குயில் சேர்மட அன்னம் அணையும் பொழில் அன்பிலா லந்துறை யாரே. அப்பர் வெள்ளம் உள்ள விரிசடை நந்தியைக் கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார்: அள்ள லார்வயல் அன்பிலா லந்துறை உள்ள வாறு அறி யார்சிலர் ஊமரே. 58. திருமாந்துறை ஆம்ரவனேசுரர்-அழகால்உயர்ந்தம்மை சம்பந்தர் : 1 வழிபட்டநாள் : 16-3-56, 11-1-66. லால்குடி இரயில் நிலையத்திற்கு மேற்கே 3 கல்.