பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 61 திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 3 மைல். சிலந்தியும் யானையும் வழிபட்டதலம். வெள்ளையானை வழிபட்ட காரணத்தால் இத்தலம் ஆனைக்கா என்னும் பெயர் பெற்றது. சிவலிங்கத்தின் அடியில் இருந்து ஊற்றுப் பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்கிறது. முற்பிறவியில் சிலந்திப் பூச்சியாக இருந்து ஆனைக்காவை வழிபட்டவரே பின்னர் அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய கோச் செங்கட் சோழ நாயனாராகப் பிறந்து எழுபது சிவபெருமானுக்குரிய மாடக் கோயில் கட்டினார் என்பது வரலாறு. இச் செய்தியைச் சைவப் புலவர்கள் பாராட்டுவது ஒரு புறமிருக்க, "இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபதுசெய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச்சோழன்" எனத் திருமங்கை ஆழ்வார் பெரிதும் பாராட்டுவார். சம்பந்தர் ஊழிஊழி வையகத்து உயிர்கள்தோற்றும் வானொடும் ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலைக் காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்துஇவை வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே. அப்பர் காராரும் மணிமிடற்றுஎம் பெருமான் தன்னை, காதில்வெண் குழையானை, கமழ்பூங் கொன்றைத் தாரானை, புலியதளின் ஆடை யானை. தான்.அன்றி வேறொன்றும் இல்லா ஞானப் பேரானை, மணியார மார்பி னானை, பிஞ்ஞகனை. தெய்வநான் மறைகள் பூண்ட தேரானை, திருவானைக்கா, உளானைச் செழுநீர்த் திரளைச்சென்று ஆடி னேனே.