பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருத்தலப்பயணம் சுந்தரர் தாரம் ஆகிய பொன்னித் தண்துறை ஆடி விழுத்தும் நீரில் நின்றுஅடி போற்றி நின்மலா கொள்என ஆங்கே ஆரம் கொண்டஎம் ஆனைக் கா.உடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடை யாரே. மணிவாசகர் முன்னானை. மூவர்க்கும் முற்றுமாய். முற்றுக்கும் பின்னானை. பிஞ்ஞகனை. பேணு பெருந்துறையில் மன்னானை. வானவனை. மாதுஇயலும் பாதியனைத் தென்ஆனைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை. என்னானை, என்னப்பன் என்பார்கட்கு இன்அமுதை அன்னானை அம்மானைப் பாடுதும்காண். அம்மானாய்! ஐயடிகள் காடவர் கோன் நாயனார் குழிஇருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட வழிஇருந்த அங்கங்கள் எல்லாம்-தழிஇருந்தும் என்ஆனைக்கு ஆவா இதுதகா என்னாமுன் தென்ஆனைக் காஅடைநீ சென்று. 61. திருப்பைஞ்ஞ்லி நீலகண்டேசுரர்-விசாலாட்சி சம்பந்தர் : 1. அப்பர் : 1. சுந்தரர்: 1 வழிபட்டநாள் : 16-3-56, 11-1-66. திருச்சி சென்னை பெருவழிச் சாலையில் 4 கல் சென்று கொள்ளிடப்பாலம்கடந்தவுடன் வடமேற்கேசேலம்பாதையில் சென்று மணச்சநல்லூருக்கு 1% மைல் அளவு சென்றால் இத்தலத்தை அடையலாம். பைஞ்ஞ்லி என்பதற்குப்பசுமையான வாழை என்பது பொருள். வாழைகோயிலில் இருக்கின்றது. பசியினால் வருந்திய அப்பர் சுவாமிகளுக்குச் சிவபிரான் கட்டமுது கொடுத் தருளிய தலம் இது.