பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருத்தலப்பயணம் சம்பந்தர் மேல்அது நான்முகன் எய்தியது இல்லை கிழ்அது சேவடி தன்னை. நீல்அது வண்ணனும் எய்தியது இல்லை எனஇவர் நின்றதும் அல்லால், ஆல்அது மாமதி தோய்பொழில் பாச்சி லாச்சிரா மத்துஉறை கின்ற பால்அது வண்ணரோ பைந்தொடி வாடப் பழிசெய்வ தோஇவர் பண்பே. சுந்தரர் செடித்தவம் செய்வார் சென்றுழிச் செல்லேன் திவினை செற்றிடும் என்றே அடித்தவம் அல்லால் ஆசையும் அறியேன். ஆவதும் அறிவர்எம் அடிகள். படைத்தலைச் சூலம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத்துஎம் பரமர்: பிடித்தவெண் aறே பூசுவ தானால் இவரலாது இல்லையோ பிரானார்? ஐயடிகள் காடவர் கோன் நாயனார் இட்ட குடிநீர் இருநாழி ஓர்உழக்காச் சட்டஒரு முட்டைநெய் தான்கலந்து-அட்ட அருவாச்சாறு என்றுஅங்கு அழாமுன்னம் பாச்சில் திருவாச்சி ராமமே சேர். 63. திருஈங்கோய்மலை (திருவிங்கநாதமாலை) மரகதநாதர்-மரகதவல்லி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 12-11-56; 10-1-66. திருச்சி - சேலம் பெருவழிச் சாலையில் இத் தலம் முசிரிக்கு