பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

சடங்கினை முன்னின்று நிகழ்த்தித் திருநல்லூர்ப் பெரு மனத்தில் ஈறில் பெருஞ்சோதியினில் உடன்புகுந்தார்

{28) தமிருந்தியடிகள் காயஞர்

இவர் சோழநாட்டில ஏமப்பேறுாரில் அந்த ண ர் குலத்தில் தோன்றினர். இவர்க்குப் பெற்ருேர் இட்ட பெயர் நம்பிநந்தி என்பதாகும். அதுவே நமிநந்தி எனத் திரிந்து வழங்கியது. நமிநந்தியடிகள் இரவும் பகலும் சிவ பெரும ;னேப் பூசித்து மகிழும் சீலமுடையவர். இவர் ஒருநாள் திருவாரூர்த் திருக்கோயிலை வழிபடச் சென்ருர், அக்கோயிலின் ஒரு பக்கத்தே அரனெறி என்னும் கோயிலை மாலைக் காலத்தில் அடைந்தபொழுது அங்கு விளக்கில்லை. விளக்கேற்றி வழிபட எண்ணிய இவர், கோயிலின் அண்மை யிலுள்ள ஒரு வீட்டிற்சென்று விளக்கிற்கு எண்ணெய் கேட் டார். அவ்வீட்டார் சமணர்கள். அவர்கள் நமிநந்தி பாரை நோக்கி தீயினைக் கையிலே ந் தி யு ள் ள உங்கள் இறைவனுக்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை. விளக்கெரிப்பதாகில் நீரை முகந்து எரிப்பீராக’ என்றனர். அந்நிலையில் ‘நமி நந்தியே, அயலேயுள்ள குளத் தின் நீரை முகந்து விளக்கு ஏற்றுக’ என்றதோர் அசரீரி வாக்கெழுந்தது. அதனைக் கேட்ட ந மி நந் திய டி க ள் திருவைந்தெழுத்தோதி கமலாலயத் திருக்குளத்து நீரை முகந்து விளக்கேற்றினர், விளக்கு சுடர்விட்டெரிவ தாயிற்று. நாளும் இவ்வாறு நீரால் திருவிளக்கும் பணியினை மேற்கொண்டு செய்து வந்தார். அப்பொழுது தண்டியடிகள் நாயனரால் சமணர்கள் கலக்கமடைந்து ஆரூரைவிட்டு அகன்றனர். சோழமன்னர் நிபந்தமளித்துத் திருவாரூரிற் பங்குனி யுத்திரப் பெருவிழாவைச் சிறப்புற நிகழ்த்துதற்கு நமிநந்திய டிகள் உறுதுணையாயிருந்தார், திருவிழா நாட்களில் ஒருநாள் திருவ்ாரூரிறைவிர் அருகேயுள்ள மணலி என்ற ஊருக்கு எழுந்தருள்வது வழக்கம். இறைவர் மீண்டு திருவாரூர் புக மாலைப் பொழுதாயிற்று. விழாவினைக் கண்டு மகிழ்ந்த நமிநந்தி