பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

நோக்கிக் குருடா, செவியும் இழந்தனையோ என இகழ்ந் தனர். அதுகேட்ட தண்டியடிகள் வெகுண்டு மந்த உணர்வும் விழிக்குருடும் கேளாச் செவியும் உமக்கே யுள்ளன என்ருர், அது கேட்ட சமணர்கள் நீ உன் தெய்வத்தருளால் கண் பெற்ருயாகில் நாங்கள் இந்தவூரில் இருக்கமாட்டோம் என்று சொல்லித் தண்டியடிகள் கையிலுள்ள மண்வெட்டியைப் பறித்து நட்ட தறியையும் பிடுங்கி எறிந்தனர். தண்டியடிகள் அரசன் முன்னிலையில் திருக்குளத்தில் மூழ்கி இறைவனருளால் கண்ணுெளி பெற்று எழுந்தார். சமணர்கள் யாவரும் கண்ணுெளி பிழத்தனர். அரசன் தண்டியடிகட்கு இடர் விளேத்த சமணர்களை ஊரைவிட்டு அகற்றின்ை. குளக்கரையினை படைத்திருந்த சமணப்பாழிகளை இடித்துப் போக்கிக் குளத்தின் கரைகளைச் செம்மைப்படுத்தினன். தண்டி படிகள் நாயனர் திருவாரூரிற் சிவப்பணிகள் பல புரிந்து: இறைவனடி சேர்ந்தார். (33) மூர்க்க காபஞர்

தொண்டை நாட்டில் திருவேற்காடு என்னும் ஊரில் வேளாளர் குலத்திற் பிறந்தவர் மூர்க்க நாயனர் . இவர் சூதாடுந்தொழிலில் தேர்ச்சி பெற்றவர். சூதாடி வென்றுகொண்டே பொருளையெல்லாம் சிவனடியார் களுக்கு அமுதுாட்டுவதில் செலவு செய்துவந்தார். தம் மூரில் சூதாட வருவோர் கிடைக்காமையால் சோழ நாட்டுத் திருக்குடந்தைக்கு வந்து தங்கிச் சூதாடிப், பெற்ற பொருளைக்கொண்டு நாள்தோறும் சிவனடியார் களுக்கு அமுது படைத்து வருவாராயினர். தம்முடன் சூதாட வருவோர் ஆட்டத்தில் முறை தவறி நடப்பா ராயின் அவர்களை வாளாற் குத்திக் கொல்லும் மூர்க்கத் தன்மையினராக இவர் வாழ்ந்தமையால் மூர்க்கர் எண் வழங்கப்பெற்ருர். எத்தொழிலச் செய்தேனும் அடி யார்களது பசியை அகற்றுதலேக் குறிக்கோளாகக்கொண்ட மூர்க்க நாயனர் சிவனடியார்களுக்கு அன்னம் அணித்து அரனடியை அடைந்தார்: