பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密5

ஆவன ஈசர்கழல் எனக்கொண்ட பெருஞ்செல்வராகிய இவர், சிவபெருமான் திருக்கோயிலில் திருவிளக்கு எரிக்கும் பணியினே ஆர்வமுடன் செய்துவந்தார். வறுமையுற்ற இவர் தில்லைப்பதியை அடைந்து கணம்புல் என்ற புல்ல்ே அரிந்து விற்று அப்பொருளைக் கொண்டு நெய் வாங்கித் திருப்புலிச்சரத் திருக்கோயிலில் திருவிளக்கு எரித்து வந்தார். கணம்புல்லை விற்றுவந்மையால் கணம்புல்லர் என அழைக்கப் பெற்ருர். ஒருநாள் கணம்புல் விற்கா தொழியத் திருக்கோயிலில் அந்தப் புல்லையே கொண்டு விளக்காக எரித்தார் அப்புல் விளக்கெரிக்கப் போதாமையால் அதனுடன் தமது முடியையும் சேர்த்து எரித்தார். அப்பொழுது சிவபெருமான் காட்சி கொடுத்தருள அம்முதல் வரை வணங்கிச் சிவலோகத்தை அடைந்தார். (50) காரிநாயஞர்

திருக்கடவூரில் தோன்றிய காரியார் , வண்தமிழின் துறையான பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் உள்ளுறையாக மறையத் தம்பெயராற் காரிக்கோவை எனத் தமிழ்க்கோவை பாடித் தமிழ் மூவேந்தர்களிடமும் சென்று அவர்கள் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார். வேந்தர்களிடம் பெற்றபொருளைக் கொண்டு 8ഖ് பேருமானுக்குத் திருக்கோயில்கள் பல கட்டுவித்தார். மக்கள் மகிழச் செய்யுட்களின் சொற்பொருள் நயங்களை விளக்கி அவர்கள் தந்த பொருள்களைச் சிந்தையராய காரி நாயனர் சிவனருளால் வாய்ந்த மனம்போல் உடம்பும்

வடகயிலைமலை சேர்ந்தார்.

(51) கின்றசீர் நெடுமாற நாயஞர்

பாண்டி நாட்டிலே மதுரை மாநகரிலிருந்து ஆட்சிபுரிந்த கூன்.பாண்டியன் சமண சமயத்தை மேற் கொண்டு, பின்னர்த் திருஞானசம்பந்தர் பாடியருளிய திருநீற்றுப்பதிகத்தால் வெப்புநோய் நீங்கிச் சைவ சமயத்தை மேற்கொண்டு கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடு மாறன் ஆயினன் மங்கையர்க்கரசியார் கணவராகிய

சிவ-5