பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B திருப்பாவை விளக்கம்

கற்பனையில் ரீ வில்லிபுத்துரர் ஆய்ப்பாடி ஆகிறது. அந்த ஆய்ப் பாடியிலே பெருமையெல்லாம் பிறங்குகின்ற செல்வச்சிறு பெண்களாக ஆய்ப்பாடிவாழ் மகளிர் காட்சி அளிக்கிறார்கள்.

இனி, பெண்களைத் தங்களோடு வாவென்று அழைத்த மகளிர் கண்ணனின் பல்வேறு சிறப்புகளைப் பாடிப் புகழ்கிறார்கள். கண்ணன், கரிய வேலினைக் கொண்டு காவல் காக்கும் கொடுந்தொழிலை மேற்கொண்டுள்ள நந்தகோபனுடைய மகன் என்றும், அழகுமிக்க கண்களை உடைய யசோதையின் இளம் சிங்கம் என்றும், கரிய திருமேனியினையும், சிவந்த கண்களையும் கொண்டு ஒளிக்குக் கதிரோனாகவும் குளிர்ச்சிக்கு முழு மதியோனாகவும் காட்சியளிப்போன் என்றும் புகழ்கிறார்கள். பாவை நோன்புக்குப் ‘பறை’ என்ற ஒரு வாத்தியம் வேண்டும். அந்தப் பறையை நாராயணனே நயந்து நமக்குத் தருவான் என்கிறார்கள். ஈண்டு நாராயணனே என்ற சொல்லின் இறுதியுள்ள ஏகாரமும் நமக்கே என்ற சொல்லிலுள்ள ஏகாரமும் தனிச்சிறப்பு வாய்ந்தனவாகும். நாராயணன் மட்டும்தான் பறை தரமுடியுமென்பதும், அவனிடத்து ஆரா அன்பு செலுத்திப் பாவை நோன்பு மேற்கொள்ளும் நமக்கு மட்டும் தான் அருள் செய்வான் என்பதும் இவ் ஏகாரங்கள் வழங்கும் சிறப்புப் பொருள்களாகும். இவ்வாறு ‘உலகத்தில் உள்ளவர்கள் நம்மைப் புகழ, நோன்பிலே ஊன்றி மார்கழி நீராடுவோம், பெண்களே வாருங்கள்’ என்று, சேரவாரும் ஜெகத்திரே என்றபடி, பிற மகளிரை அழைக்கிறார்கள். இத்திருப்பாடலில் அமைந்துள்ள ஒவ்வொரு சொல்லும் தேர்ந்தெடுத்த சொற்கள் எனலாம். அவற்றினும் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்’ என்னும் தொடர் முரண் தொடை நயம் அமைந்துள்ளதாகும். இத்தொடர் நெஞ்சில் ஒர் இனிய காட்சித் திரையினை