பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q8 திருப்பாவை விளக்கம்

திருவாய்ப்பாடிப் பெண்கள் பாவை நோன்பு மேற்கொள்ள நெய் உண்ணாமலும் பால் உண்ணாமலும் விரதம் இருந்தார்கள். இப்பொழுது பாலும், கருப்புக்கட்டியும் நெய்யும் சேர்த்துச் சமைக்கப்பட்ட அக்கார அடிசிலை ஆசைதிர உண்கிறார்கள். கூடி இருந்து குளிர்ந்து என்னும் தொடரால் தாம் பெற்ற பேறு பிறரும் பெறவேண்டும் என்ற உயர்நோக்கமும், எல்லாருமே இன்புற்றிருக்க நினைக்கின்ற மனமும் ஒருசேர விளங்கும்.

கூடாரை வெல்லும்,சீர்க் கோவிந்தா!

உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (27)