பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கறவைகள் பின்சென்று

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து,

உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்று மில்லாத கோவிந்தா!

உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே (றன்னைச்

இறைவா. நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்.

திருவாய்ப்பாடிப் பெண்கள் பாவை நோன்புக்குரிய சங்கு, பறை, பல்லாண்டு பாடுவோர், மங்கல விளக்கு, கொடி, விதானம் முதலானவற்றைப் பெற்று நோன்பு நோற்கின்றார்கள். நோன்பு முடிந்த பின்னர் ஆடை அணிகலன்களைப் பெற்று அக்கார அடிசிலைப் பலரோடும் கூடி உண்டு மகிழ்ந்தார்கள். கண்ணனிடம் திருவாய்ப்பாடிப் பெண்கள் இரந்து வேண்டுவனவற்றை அடைவதற்காக மேற்கொண்ட வழிவகைகள் என்ன என்பது குறித்து இந்தப் பாசுரம் சொல்கின்றது.

ஆயர்கள் பசுக்களை ஒட்டிச் சென்று முல்லைக் காட்டில் மேய விட்டு, தங்களோடு எடுத்துச் சென்ற சோற்றை உண்டு பசியாறுகின்றார்கள். ‘அறியாத சிறு பெண்களாக விளங்கும் நாங்கள், பிறவி பெற்றதன் புண்ணியப் பயனாக எங்கள் ஆயர்குலம் உன்னைப் பெற்று வளர்த்ததனால் அடைந்து விட்டோம். எங்களிடம் குறை இருந்தாலும் உன்னிடம் ஒரு குறையும் இல்லை. குறை ஒன்றும் இல்லாக் கோவிந்தனாக, பரிபூரணனாக நீ விளங்குகின்றாய்” என்று குறிப்பிடுகின்றார்கள்.