பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () () திருப்பாவை விளக்கம்

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து,

உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்று மில்லாத கோவிந்தா!

என்கிறார்கள்.

நாங்கள் அறியாதவர்கள். எங்கள் அறியாமையினால் பிழைகள் செய்திருக்கக் கூடும். அதற்காக எங்கள் மீது கோபம் கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறார்கள். ஏனெனில் உன்னோடு எங்களுக்கு ஏற்பட்டுவிட்ட உறவை யாராலும் அழிக்க முடியாது. நாங்கள் உன்னைச் சிறுபெயரிட்டுச் சில சமயங்களில் அழைத்தது பற்றி எங்கள் மேல் சீறிப் பாயாதே. இவ்வாறு நாங்கள் செய்த பிழை, அன்பினால் செய்த பிழை; அறியாமை காரணமாகச் செய்த பிழை. எனவே நீ அருள் உள்ளம் கொண்டு எங்களை மன்னித்து ஏற்றருள வேண்டும். இறைவனே! எங்களுக்குப் பறை தந்து எங்களைப் பரிபாலித்தோனே என்று அவனைத் துதிக்கின்றார்கள்.

- = ----- - உன் தன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே (றன்னைச்

இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்.

திருவாய்ப்பாடிப் பெண்கள் தங்களை அறிவற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கண்ணனிடத்திலே பக்தி செலுத்த வேண்டுமென்கிற ஒர் அறிவு இருக்கத்தானே செய்கின்றது! உய்வதற்கு அந்த ஓர் அறிவு போதுமே! இங்கு, “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்னும் தாயுமான தயாபரரின் வாக்கும் நினையத் தக்கது.