பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. சிற்றஞ் சிறுகாலே

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன்

பொற்றா மரையடியே போற்றும்

பொருள் கேளாய் பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்துநீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண்

கோவிந்தா! எற்றைக்கும். ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோ டுற்றோமே யாவோம் உனக்கேநாம்

ஆட்செய்வோம் மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

இதுகாறும் கண்ண்பிரானிடம் பறை வேண்டும், பறை வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுவந்த திருவாய்ப்பாடிப் பெண்கள், இந்தப் பாசுரத்தில் தங்கள் நோக்கத்தை வெளிப்படையாகவே புலப்படுத்தி விடுகின்றார்கள். திருப்பாவையின் உட்பொருள் - பரம தாத்பரியம் - இந்த இருபத்தொன்பதாவது திருப்பாசுரத்தில் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டுள்ளதாகப் பெரியோர்கள் கூறுவர். எனவே இத்திருப்பாசுரத்தினைத் திருப்பாவையின் உயிர்நிலைப் பாட்டென்றும் குறிப்பிடுவர்.

“மிகவும் அமைதியாக இருக்கின்ற வைகறைப் பொழுதிலே கண்ணனே! நாங்கள் கூட்டமாக வந்து உன்ஒன்த்’ தொழுதோம். இப்போது நாங்கள் உன்னைப் போற்றுவதன் பொருளையும், அதன் விளைவாக நாங்கள் கேட்கும் பயனையும் உன் திருச்செவி வழிக் கேட்பாயாக’ என்று தங்கள் வேண்டுகோளை முன்வைக்கின்றார்கள்.