பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 103


சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன்


பொற்றா மரையடியே போற்றும்


பொருள் கேளாய்


எனத் தொடங்கினர்.


இவ்வாறு முகமன் கூறிவிட்டு, “நீயும் நாங்கள் பிறந்து வளர்ந்த ஆயர்குடியிலே பிறந்து வளர்கின்றாய்; அதனால் எங்களுக்கு உறவாகி விடுகின்றாய். பசுக்களை மேய்த்து அதனால் கிடைக்கும் பயனைப் பெற்று வாழும் எங்களை அடைக்கலமாய்க் கொண்டுசெலுத்தாமல், கைவிடுவது என்பது உன் தகுதிக்குத் தகாதது. இப்போது நீ கொடுக்கின்ற பறையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மட்டுமன்று, நாங்கள் உன்னிடத்தில் வந்தது; இந்தப் பிறவியில் மட்டுமல்ல. இனி வருகின்ற ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் உனக்கு உறவுடையவர்கள் ஆக வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமை செய்பவர்களாக இருக்க வேண்டும். ஆதலால் கோவிந்தனே! இந்த ஆசை தவிர மற்ற ஆசைகளை எங்கள் மனத்திலிருந்து அகற்றிவிட்டு எங்களை ஆட்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறார்கள்.


பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்துநீ


குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண்


கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோ டுற்றோமே யாவோம் உனக்கேநாம்


ஆட்செய்வோம் மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். இத்திருப்பாசுரத்தில்தான் கண்ணன் அன்பே தாங்கள் கருதிய பொருள் என்பதனைக் கூறிப் பக்தித் திறமே பரமனை அடைய எளிய வழி என்பதனைத் திருவாய்ப் பாடிப் பெண்கள் புலப்படுத்தி உள்ளார்கள் எனலாம்.