பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1()4 திருப்பாவை விளக்கம்

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோ டுற்றோமே யாவோம் உனக்கேநாம்

ஆட்செய்வோம்

என்று ஆய்ச்சியர், அருளாளன ஆகிய கண்ணனிடம் வேண்டியனவே இந்த உலக உயிர்கள் ஒவ்வொன்றும் இறைவனிடம் இரந்து வேண்டும் வரமாக அமைய வேண்டும். அதாவது இந்த ஒரு பிறவியிலன்றி இனி வருகின்ற எல்லாப் பிறவிகளிலும் இறைவனுக்கே - ஊனமொன்றில்லா உத்தமனுக்கே ஆளாக வேண்டும் என்ற உயிர் வேட்கை இந்தத் திருப்பாசுரத்தால் - இந்த உயிர்நிலைப் பாட்டால் உறைப்பாக உணர்த்தப்படுகின்றது.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்

பொற்றா மரையடியே போற்றும்

பொருள் கேளாய் பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்துநீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண்

கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோ டுற்றோமே யாவோம் உனக்கேநாம்

ஆட்செய்வோம் மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். (29)