பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வங்கக்கடல் கடைந்த மாதவன்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை,

திங்கள் திருமுகத்துச் சேயிழையார்

சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்

கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு

மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ

ரெம்பாவாய்.

இருபத்தொன்பதாவது திருப்பாசுரத்தில், திருப் பாவையின் தனிப்பெரும் பொருள் - சத்தான பொருள் - விளக்கப்பட்டு விட்டது கண்டோம். இந்த முப்பதாவது திருப்பாசுரத்தில் ஒரு முத்தாய்ப்பு - அதுவும் முத்தான முத்தாய்ப்பு வைக்கப்படுகின்றது. திருப்பாவை முப்பது பாடல்களையும் தப்பாமல் படிப்பவர், எங்கும் எப்பொழுதும் கண்ணனின் கணக்கில்லாத கருணையினைப் பெற்று இன்புறுவர் என்பதனை இவ் இறுதித் திருப்பாசுரம் தெரிவிக்கின்றது.

தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தார்கள். இதற்குத் தன் திருமேனி நோகப் பாடுபட்டவன் கண்ணன். விரும்புகின்றவர்கள், எப்பொருளை விரும்புகின்றார்களோ அப்பொருளைக் கொடுக்கும் ஆற்றலுடையவனாக விளங்குகின்றான் கண்ணன். விண்ணவர் விரும்பிய அந்தக் கடலமுதம் வங்கக் கடல் கடைந்த மாதவனால், கேசவன்ால் அவர்களுக்கு வழங்கப்