பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--

106 திருப்பாவை விளக்கம்

பட்டு விட்டது. தேவர்கள் கண்ணன் உதவியால் அமுதம் வேண்டினார்கள். ஆனால் திருவாய்ப்பாடிப் பெண்களோ தாங்கள் உண்ணும் அமுதமாகக் கண்ணனையே வேண்டினார்கள். எனவே விண்ணவரைக் காட்டிலும் மண்ணவராகிய ஆய்ப்பாடி ஆயர்குலப் பெண்கள் பலபடி மேலானவர்கள் அன்றோ! என்றைக்கும் தித்திக்கும் தெள்ளமுதை யன்றோ அவர்கள் வேண்டிப் பெற்றார்கள்! அப்படிப்பட்ட பெண்களை,

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் என்கின்றார் ஆண்டாள். இத்தகைய பெருமை வாய்ந்த, சந்திரனைப் போலக் குளிர்ந்த முகம் கொண்ட, அணிகலன்கள் அணிந்த பெண்கள், கண்ணனைக் கண்டு இரந்து கேட்டுப் பாவை நோன்புக்குப் பறையினைப் பெற்றுக் கொண்ட வழிவகையினைத் திருப்பாவை புலப்படுத்து கின்றது. பூரீவில்லிபுத்துரிலே வாழ்ந்த தாமரை மலர்களால் ஆன குளிர்ந்த மாலையினைச் சூடிய பட்டர்பிரான் என வழங்கும் பெரியாழ்வாரின் அருமைத் திருமகளான ஆண்டாள், கூட்டம் கூட்டமாக மகளிர் சேர்ந்து அனுபவிக்கக் கூடிய தமிழ்ப் பாமாலையினால் அமைந்துள்ள முப்பது பாசுரங்களையும், தப்பாமல் சொல்பவர் திருமாலிடம் சிறப்பான பரிசினைப் பெறுவார்கள். அப்பரிசானது எங்கும் எப்பொழுதும் அவனுடைய திருவருளைப் பெற்று இவ்வுலகத்தில் நீண்ட நெடுங்காலம் இன்புற்று வாழும் பேற்றினைப் பெறுவார்கள் என்பதாகும்.

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை,

திங்கள் திருமுகத்துச் சேயிழையார்

சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்

கோதைசொன்ன