பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 107

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு

மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்

எம்பாவாய். (30) இத்திருப்பாசுரம், திருப்பாவையைக் கற்றவர்கள், எம்பெருமான் திருவருளால் எங்கும் எப்பொழுதும் திருவருள் பெற்று மகிழ்ந்து வாழ்வர் என்பதனைக் குறிப்பிடுகின்றது. இதனைப் ‘பலச்சுருதி’ என்பர் வைணவப் பெரியோர். ஆண்டாள், தான் இயற்றிய பாட்டு என்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதால் இந்த இறுதித் திருப்பாசுரத்தினைத் திருநாமப் பாட்டு என்றும் பெரியோர் கூறுவர்.

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணிமாடம் தோன்றுமூர் - நீதியால் நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகள் ஒதுமூர் வில்லிபுத்துரர் வேதக் கோனுரர்

திருப்பாவையின் சிறப்பினை, பாதங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு

என்னும் வைணவப் பெரியவர் உய்யக் கொண்டார் அருளிய தனியன் கொண்டு அறியலாம். எனவே கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதான திருப்பாவையினை ஒதி எம்பெருமான் திருவருள் பெற்று என்றும் எங்கும் எவரும் 32_LLILLJGu)fTLD.