பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 9

விரிக்கின்றது. கம்பநாடரும் தம் இராமாயணத்தில் “செங்கணும் கரியகோல மேனியும் தேருமாகி எங்கனும் தோன்றுகின்றார் எனைவரோ இராமன் என்பார்” என்று குறிப்பிட்டுள்ளதனை ஒப்பு நோக்கலாம்.

பறை வேண்டும் என்று நாரணனைப் பாடிச் செல்வது ஒரு பேச்சுக்குத்தான் - ஒரு வியாஜம் தான். ஆழ்ந்து நோக்கின் கிருஷ்ண பக்தியும் கைங்கரிய விருப்பமும் உள்ளடக்கித்தான் இந்தப் பெண்கள் இந்தப் பாவை நோன்பை நோற்கிறார்கள் என்றும், நோன்பு நோற்றால் மழை பெய்யும் என்றும், மழை பெய்தால் நாடு செழிக்கும் என்றும், நாடு செழித்தால் ஆய்ப்பாடியில் வாழ்வோர், ஆய்ப்பாடிப் பெண்கள் நோற்று மழை பெய்தது என்று அவர்களைப் புகழ்வார்கள் என்றும் இப்பாட்டால் அறியப்படுகின்றன.

‘மார்கழித் திங்கள் எனத் தொடங்கிப் படிந்தேலோ ரெம்பாவாய்’ என்று முடியும் இத் திருப்பாவையில் அமைந்துள்ள ஒவ்வோர் அடியும் எண்ண ஊட்டல் (thought provoking) சக்தி நிறைந்த தொடர்களாகும். “நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையிர்’ என்னும் தொடர் “பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்” என்று முடிகின்றது. பொழுது விடிவதற்கு முந்திய அதிகாலையைப் ‘பிரம்ம முகூர்த்தம்’ என்பர். தூய அமைதியான அந்த விடியல் வேளையில் மார்கழிப் பணி நீராடித் தொழுது நாராயணனிடம் பறை கேட்டு நோன்பு நோற்க இள மகளிர் எல்லாரையும் திரட்டிச் செல்லும் இனிய நிகழ்ச்சியினை இப்பாடல் குறிக்கின்றது.