பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I() திருப்பாவை விளக்கம்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையிர்: சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுeர்காள்!

கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,

கார்மேனிச்செங் கண்கதிர்மதியம்போல்

முகத்தான் நாராயணனே நமக்கே பறைதருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். (1)