பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வையத்து வாழ்வீர்கள்

வையத்து வாழ்விர்காள்! நாமும்,நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளிரோ? பாற்கடலுள் பையத் துயின்ற பரம னடிபாடி,

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே

நீராடி, மையிட் டெழுதோம், மலரிட்டு நாம்முடியோம்,

செய்யா தனசெய்யோம் தீக்குறளை

சென்றோதோம், ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,

உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்று கூறிப் பிற பெண்களை விளித்த மகளிர், இந்தப் பாடலில் ‘வையத்து வாழ்விர்காள்’ என்று அழைக்கிறார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே அதுவும் வகையுற வாழ்வதற்கே என்பர் பெரியோர். எப்படியாவது வாழலாம் என்று எண்ணாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழும் வாழ்க்கை குறிக்கோளுடைய வாழ்க்கையாகும். எனவே எடுத்த எடுப்பிலேயே வையத்து வாழ்விர்காள்’ என்று விளித்த காரணத்தினால் அவர்கள் குறிக்கோளுடைய வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது பெறப்பட்டது. மேலும் ‘நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ’ என்று அடுத்து மொழிகிறார்கள். பாவை நோன்பிற்கு உரிய கிரியைகள் - செயல் முறைகள் - சடங்குகள் - சம்பிரதாயங்கள் - நடை முறைகள் ஆகியனவற்றை நாங்கள் சொல்கின்றோம் நீங்கள் கேளுங்கள் என்கின்றபடி, இந்தப் பாடலில் பாவை நோன்பு மேற்கொள்வதற்குரிய அனுஷ்டானமுறைகள் - நியமங்கள் - தெரிவிக்கப் படுகின்றன. எந்த ஒரு பெருஞ்செயலையும் மேற்கொள்ள