பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - திருப்பாவை விளக்கம்

அந்தச் செயல் சித்திபெறும் வகையில்- கைகூடும் வகையில் சில வழி முறைகளை - நியமங்களைப் பின்பற்றுவது மரபு. அவ்வாறு மேற்கொள்ளும் நியமங்களில் கொள்ள வேண்டிய நியமங்கள் சில பாவை நோன்பு மேற்கொள்ளும் பெண்கள் என்னென்ன நியமங்களை மேற்கொண்டார்கள்? என்னென்ன நியமங்களை விட்டொழித்தார்கள்? என்பதனை இத்திருப்பாடல் தெரிவிக்கின்றது. ஆய்ப்பாடிச் சிறுமியர்கள் பாற்கடலில் பையத்துயின்ற பரமன் அடி

பாடுவோம் என்கிறார்கள். இதனையே - பரந்தாமனின் மலரனைய திருவடிகளைப் பரவிப் பாடுவதையே முதன்மை விதியாக - முக்கிய விதியாகக் கொள்கிறார்கள்.

இரண்டாவது விதியாக வைகறை நேரத்திலே எழுந்து பனி நீராடிப் புறத் தூய்மையும் செய்து கொள்கிறார்கள். பரமனடி பாடியதனால் அகத்துாய்மையும் நாட்காலே நீராடியதனால் புறத் துாய்மையும் அமைகின்றன. மூன்றாவதாக, தகுதியுள்ள பெரியவர்களுக்கு - துறவிகளுக்கு அவர்களுடைய தேவை அறிந்து கொடுக்க வேண்டியனவற்றைக் கொடுக்கிறார்கள்; பிச்சை என்று வரும் இல்லாதோர்க்கு - வறியவர்க்கு இயன்ற வரையில் எடுத்து வழங்குகிறார்கள். கொடுக்கும் பொழுது நெஞ்சத்தில் செருக்குத் தோன்றாமல் கொடுக்கிறார்கள். அவ்வாறு சில விதிகள்ைத் தாங்கள் உய்யும் பொருட்டு விரும்பி மேற்கொள்ளும் - உய்யுமாறு எண்ணி உகந்து மேற்கொள்ளும் பெண்கள், சில விலக்குகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்கள் ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம்’ என்கிறார்கள். மேலும் கண்ணுக்கு மை தீட்டியும் கூந்தலுக்குப் பூச்சூட்டியும் தங்களை அலங்கரித்துக் கொள்வதில்லை என்று முடிவெடுத்துக் கொள்கிறார்கள். நெய் உண்பதில்லை; பால் குடிப்பதில்லை; கண்ணுக்கு மை எழுதுவதில்லை; கூந்தலுக்குப் பூச்சூட்டிக் கொள்வதில்லை என்பன எல்லாம் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்களாகும். அகத்தின் அழகையும் அலங்கோலமாக்கிக் கொள்ளாமல் செப்பம்