பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 13

செய்ய முற்படுகிறார்கள். எனவே செய்யாதான செய்யோம்’ என்கிறார்கள். பெரியோர்கள் தவறு என்று எவ்வெவற்றை யெல்லாம் செய்யாமல் விட்டார்களோ அவற்றையெல்லாம் நாங்களும்.செய்யமாட்டோம் என்கிறார்கள். மேலும் தீமை விளைக்கும் - ஒருவர்மேற் கோள் சொல்லும் சொற்களைப் பிறிதொருவரிடம் சென்று சொல்ல மாட்டோம் என்கிறார்கள். இவற்றில், நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்பன விரதம் முடிகின்றவரையில் மேற்கொள்ள வேண்டிய நியமங்கள் ஆகும். இவை போன்றே ‘மையிட்டெழுதோம் ‘மலர்இட்டு நாம் முடியோம்’ என்பதும் நோன்பு முடியும் வரை தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்ளும் தற்காலிக நியமங்கள் ஆகும். ஆனால், ‘செய்யாதன செய்யோம்’ என்பதும், ஒருவர் மேல் கோள் சொல்ல மாட்டோம் என்பதும் எப்போதும் விலக்கத்தக்க நியமங்கள் ஆகும். இந்த நியமங்கள் எல்லாம் பாவை நோன்பு கொண்டாடும் பெண்கள் தங்கள் நோன்பிற்குரிய கிரியைகளாகக் கொள்கிறார்கள். இந்தப் பெண்கள் “உண்ணு சோறும், பருகு நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’ என்று கொண்டவர்கள். இன்பம் தரும் சில பொருள்களைத் தாங்களாகவே முன் வந்து துறக்கும் துறவு மனப்பான்மை இவர்களுக்குச் சொர்க்கபோகத்தையே தருகின்றது. தியாகம் செய்வதே ஒரு சொர்க்க மனப்பான்மை அல்லவா? தாங்கள் அன்றாடம் விரும்பி உண்ணும் பொருள்களைச் சில காலம் வெறுத்து ஒதுக்குவதும், தாங்கள் விரும்பி மேற்கொள்ளும் அலங்காரங்களைத் துறந்துவிடுவது என்பதும் தியாகச் செயல்கள்தான். ஆனால் இவற்றை யெல்லாம் எதற்காகச் செய்கிறார்கள்? உய்யுமாறு எண்ணிச் செய்கிறார்கள் பிழைக்கும் வழியை அறிந்து செய்கிறார்கள். பெரியவர்களுக்குத் தகுதி அறிந்து தந்தும், வறியவர்களுக்குத் துன்பம் அறிந்து உதவியும் இவர்கள் போகும் வழிக்குப் புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள். பெரியவர்களுக்கும் வறியவர்களுக்கும் எவ்வளவுதான் இவர்கள் கையால் வாரி