பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - திருப்பாவை விளக்கம்

வழங்கினாலும் அதனால் மனத்தில் ஒரு சிறிதும் செருக்குத் தோன்றாமல் - நாம் என்ன கொடுத்து விட்டோம் என்று அடக்கமாக எண்ணிப் பார்க்கிறார்கள்.

இந்த ஆய்ச்சியர் பெண்கள் கண்ணனின் அடிமலர்களே தம் தலைகளுக்குத் தலையாய அணி என்று கருதுபவர்கள் ஆன காரணத்தால் மையிட்டு எழுதி, மலரிட்டு முடிந்து, புறத்தில் அலங்காரம் செய்து கொள்வதெல்லாம் அலங்காரம் ஆகாது என்று கண்டவர்கள். எனவே கண்ணன் கழல் இணையைப்பற்றி உய்யும் நெறி அறிந்து உகந்து அவ்வழியில் செல்பவர்கள். எனவே சில நியமங்களை விடுத்தும், சில நியமங்களைத் தொடுத்தும் வாழ்பவர்களாயினர். எனவே ‘வாழப் பிறந்தவர்களே! வருவீர்களாக நோன்பு நோற்போமாக! பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடியைப் பாடுவோமாக! உய்யுமாறு எண்ணி உகந்து நோன்பை நோற்போமாக!’ என்று பெண்டிரை விளித்துப் பேசி வாழ்க்கைப் பயன் பெறுமாறு அழைக்கிறார்கள்.

இவையே இரண்டாவது பாடலின் திரண்ட கருத்துகளாகும்.

வையத்து வாழ்விர்காள்! நாமும்,நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளிரோ? பாற்கடலுள் பையத் துயின்ற பரம னடிபாடி,

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே

நீராடி, மையிட் டெழுதோம், மலரிட்டு நாம்முடியோம்,

செய்யா தனசெய்யோம் தீக்குறளை

சென்றோதோம், ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,

உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய். (2)